30 வயதில் தயாரிப்பாளருடன் காதல் நிச்சயம்!! நடிகை பாவனா வெளியிட்ட திருமண புகைப்படங்கள்..
மலையாள சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை பாவனா நம்மல் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதன்பின் அடுத்தடுத்த மலையாள படங்களில் நடித்து பிரபலமானார்.
தமிழில் சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி கிழக்கு கடற்கரை சாலை, வெயில், தீபாவளி, கூடல் நகர் போன்ற படங்களில் நடித்து வந்தார். மேலும் ஆர்யா, ராமேஸ்வரம், வாழ்த்துக்கள், ஜெயம் கொண்டான், அசல் போன்ற படங்களில் நடித்தார்.
இதற்கு பின் தமிழில் வாய்ப்புகள் குறைந்து, கன்னடம், மலையாளம் மொழிகளில் அடுத்தடுத்து நடித்து வந்தார். 2017ல் நடிகர் திலீப்-ஆல் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் கொடுமை செய்ததால் சில ஆண்டுகள் வெளியில் வராமல் இருந்தார் நடிகை பாவனா.
அதிலிருந்து மீண்டு வந்த பாவனா மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தினார். கடந்த 2017ல் கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவருடன் நிச்சயம் செய்யப்பட்டு 2018ல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தனக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டதாக கூறி திருமணம் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.