நடிகை பாவனாவா இது! ரசிகர்களை ஈர்க்க சேலையில் இப்படியொரு போட்டோஷூட்..

bhavana tamilactress
By Jai Sep 27, 2021 11:10 AM GMT
Report

தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை பாவனா. மலையாள நடிகையாக நம்மாள் படத்தின் மூலம் நடிகையாக முதன்முதலில் அறிமுகமாகி முன்னணி நடிகை என்ற அந்தஷ்த்தை மலையாள சினிமாவில் பெற்றார். இதையடுத்து தமிழில் கிழக்கு கடற்கரை வாசல், வெயில், தீபாவளி, கூடர் நகர், ஆர்யா, ஜெயம்கொண்டான் உள்ளிட்ட படங்களில் நடித்தும் நடிகர் அஜித்தி அசல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இதையடுத்து கடந்த 2017ல் கன்னட திரைப்பட தயாரிப்பாளர் நவீனுடன் நிச்சம் செய்ய இருந்த நிலையில் மர்ம நபரால் கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாகினார். இதுதொடர்பாக 7 பேர் மீது வழக்கு போட்ட நிலையில் 8வது ஆளாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளி வந்தார். இந்நிகழ்வு மளையாள சினிமாவில் பெரிய அதிர்ச்சியை தற்போது வரை ஏற்படுத்தி வருகிறார். அந்நிகழ்வுக்கு பிறகு நடிகை பாவனா மீண்டு வந்து தயாரிப்பாளர் நவீனுடன் 2018ல் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு உடல் எடையை குறைத்து படங்களில் கவனம் செலுத்து வந்தார். தற்போது தான் விட்ட இடத்தினை சினிமாவில் மீண்டும் தக்கவைத்து கொள்ள போட்டோஷூட் பக்கம் சென்றுள்ளார். சேலையில் இப்படியும் ரசிகர்களை கவர போட்டோஷூட் எடுக்க முடியும் என்று ரசிகர்களை புகைப்படங்களால் ஈர்த்து வருகிறார்.