ரூ. 100 கோடி நஷ்டஈடு, மாதம் ரூ. 10 லட்சம் ஜீவனாம்சம் கேட்ட இந்திய நடிகை.. யார் தெரியுமா

Indian Actress Divorce Actress
By Kathick Dec 16, 2025 03:30 AM GMT
Report

விவாகரத்து வழக்கில் இந்திய நடிகை ஒருவர் தனது கணவரிடம் இருந்து ரூ. 100 கோடி நஷ்டஈடு மற்றும் மாதம் ரூ. 10 லட்சம் ஜீவனாம்சம் வேண்டும் என கேட்டுள்ளார். மாடல் அழகியும் பிரபல நடிகையுமானவர் செலீனா ஜெட்லீ தான் இப்படி கேட்டிருக்கிறார்.

நடிகை செலீனா ஜெட்லீ ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த ஹோட்டல் தொழிலதிபர் பீட்டர் ஹேக் என்பவரை கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.

ரூ. 100 கோடி நஷ்டஈடு, மாதம் ரூ. 10 லட்சம் ஜீவனாம்சம் கேட்ட இந்திய நடிகை.. யார் தெரியுமா | Actress Celina Jaitly Seeks 100 Crore Compensation

இந்த 15 வருட திருமண வாழ்க்கையில் அவர் தன்னை கொடுமைப்படுத்தியதாக செலீனா ஜெட்லீ டொமெஸ்டிக் வைலன்ஸ் வழக்கு பதிவு செய்துள்ளார். அதில் தனக்கு ரூ. 100 கோடி நஷ்டஈடு மற்றும் மாதம் ரூ. 10 லட்சம் ஜீவனாம்சம் தரவேண்டும் என கேட்டுள்ளார்.

இந்த விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் இரண்டு தரப்பின் வருமான விவரங்களை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, ஜனவரி 27ம் தேதிக்கு அடுத்த விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

ரூ. 100 கோடி நஷ்டஈடு, மாதம் ரூ. 10 லட்சம் ஜீவனாம்சம் கேட்ட இந்திய நடிகை.. யார் தெரியுமா | Actress Celina Jaitly Seeks 100 Crore Compensation