இரண்டு நடிகைகளுடன் கைகோர்க்கும் தனுஷ்.. யார் அந்த நடிகைகள் தெரியுமா?
தனுஷ் நடிப்பில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகவுள்ள படம் D55. அமரன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ராஜ்குமார் இயக்கும் படம் இதுவாகும்.
முதல் முறையாக தனுஷுடன் அவர் இணைந்துள்ளார். இப்படத்தின் பூஜா சில மாதங்களுக்கு முன் நடந்தாலும், இப்படத்தின் இசையமைப்பாளர் யார், கதாநாயகி யார் என்பது குறித்து அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக இப்படத்தில் கமிட்டாகியுள்ள பிரபலங்களின் அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வருகின்றனர். இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்கிறார் என அறிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து இப்படத்தில் சென்சேஷனல் இளம் நடிகை ஸ்ரீலீலா மற்றும் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட முன்னணி நடிகை சாய் பல்லவி ஆகிய இருவரும் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே சாய் பல்லவி தனுஷுடன் இணைந்து மாரி படத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடலுக்கு இவர்கள் இருவரும் நடனமாடியது மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

