மிஸ் மெட்ராஸ் வின்னர்!! மிஸ் இந்தியா போட்டியில் ஐஸ்வர்யா ராயுடன் போட்டிப்போட்ட தமிழ் நடிகை
நடிகை கஸ்தூரி
90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து ஆத்தா நான் பாஸ் ஆகிட்டேன் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி டாப் நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை கஸ்தூரி. இதனையடுத்து ராசாத்தி வரும் நாள், சின்னவர், செந்தமிழ்ப் பாட்டு, இந்தியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் கஸ்தூரி, அரசியல் விமர்சகராகவும் திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் தன்னுடைய மகள் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஏழரை ஆண்டுகளுக்கு பின் குணமடைந்ததாக உருக்கமாக பேசியிருந்தார்.

மிஸ் இந்தியா போட்டி
1994ல் நடைபெற்ற மிஸ் இந்தியா அழகிப்போட்டிகளின் வரலாற்றிலேயே மிகவும் முக்கியமானது. ஏனென்றால், அந்த போட்டியில் கஸ்தூரி கலந்து கொண்டு டாப் 10 இடத்தினை பிடித்தார். ஆனால் உலகப்புகழ்பெற்ற ஐஸ்வர்யா ராய் மற்றும் சுஷ்மிதா சென் இருவரும் டாப் 2 இடத்தினை பிடித்தனர். மிஸ் சென்னை பட்டத்துடன் கஸ்தூரி அப்போட்டியில் நுழைந்துள்ளார்.

அப்போட்டியில் சுஷ்மிதா சென் முதலிடம் பிடித்து மிஸ் இந்தியா பட்டத்தையும், ஐஸ்வர்யா ராய் இரண்டாம் இடம்பிடித்து மிஸ் இந்தியா வேர்ல்ட் பட்டத்தையும் வென்றனர். பின் அதே ஆண்டில், சுஷ்மிதா மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தையும் ஐஸ்வர்யா ராய் மிஸ் வேர்ல்ட் பட்டத்தையும் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர்.
இரண்டு உலக அழகிகள் ஒரே மேடையில் போட்டியிட்டதையும் அவர்களிடம் தோல்வியடைந்ததையும் கஸ்தூரி பேட்டியொன்றில் பெருமையாக கூறியிருக்கிறார்.
