ரஜினியுடன் ஒரு இடத்துக்கு போனேன்..அது மட்டும் இருந்தால் அவ்வளவுதான்!! நிம்மதி பெருமூச்சு விட்ட நடிகை..
75 ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் ரஜினிகாந்த், டிசம்பர் 12 ஆம்தேதி தன்னுடைய 75 வயதை கடந்தார். ஜெயிலர் 2 படத்தினை அடுத்து அடுத்த படங்களிலும் நடிக்கவுள்ள ரஜினிகாந்த், இப்போது பக்குவமாக எல்லா விஷயங்களையும் பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால் அவருடய இளமை பருவத்தில் மொத்தமாக வேறொரு ஆளாக இருந்தார்.

தன் மனதில் என்ன தோன்றுகிறதோ அதையெல்லாம் யாருக்கும் அஞ்சாமல் பேசிவிடுவார். அதேபோல் அவரது 30 வயதில் ஏகப்பட்ட கிசுகிசுக்களிலும் சிக்கினார் முக்கியமாக நடிகை லதாவுடனான கிசுகிசு. இருவரும் காதலித்தார்கள், இதை விரும்பாத எம் ஜி ஆர், ரஜினிக்கு வாழ்நாளில் மறக்க முடியாதபடி ஒரு செயலை செய்தாராம்.

ஆனால் அது எவ்வளவு தூரம் உண்மை என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். ரஜினியை பற்றி தொடர்ந்து எழுந்த கிசுகிசுக்களால் அவரது மனைவி லதாவை பெண் கொடுக்கவே வீட்டார்கள் யோசித்தார்களாம்.
நடிகை லதா
இந்நிலையில் மூத்த நடிகை லதா அளித்த பேட்டியில், நான், ரஜினிகாந்த், விஜயகாந்த் 3 பேரும் ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடித்தோம். அப்படத்தின் ஷூட்டிங்கில் நாங்கள் ஜாலியாக பேசிக்கொண்டிருப்போம். நாங்கள் ஒருமுறை பழனி முருகன் கோயிலுக்கு சென்று வந்தோம்.

அப்போது அதை பெரிய விஷயமாக்கிவிட்டார்கள். நல்ல வேளை இப்போது மாதிரி, யூடியூப் எல்லாம் அப்போது இல்லை. அதனால் கிசுகிசுவோடு நிறுத்திவிட்டார்கள். இந்த காலமாக இருந்திருந்தால் இஷ்டத்துக்கு பேசியிருப்பார்கள்.
அதெல்லாம் கடந்து வந்துவிட்டோம். இப்போது நல்ல குடும்ப நண்பர்களாக இருக்கிறோம். எம்ஜிஆருக்கு பின் தலைக்கனம் இல்லாத நபர் என்றால் அவர் ரஜினிதான் என்று நடிகை லதா தெரிவித்துள்ளார்.