கனிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட லப்பர் பந்து பட நடிகை.. இணையத்தை கலக்கும் வீடியோ

Suriya Trending Videos Pooja Hegde
By Bhavya Apr 08, 2025 04:30 AM GMT
Report

சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கங்குவா. பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் தோல்வி அடைந்தது.

இப்படத்தை தொடர்ந்து சூர்யா, கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துவிட்டார். இப்படம் மே 1ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

சூர்யாவிற்கு ஜோடியாக இப்படத்தில் பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், கருணாகரன், நந்திதா தாஸ் என பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் முதல் பாடல் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்த நிலையில், சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் பாடலான கனிமா பாடல் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கனிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட லப்பர் பந்து பட நடிகை.. இணையத்தை கலக்கும் வீடியோ | Actress Dance Video Goes Trending

வீடியோ 

இந்த பாடலுக்கு பலரும் ரீல்ஸ் செய்து இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில், இந்த டிரெண்டில் தற்போது லப்பர் பந்து பட நடிகை சுவாசிகாவும் இணைந்துள்ளார்.

அவர் கனிமா பாடலுக்கு நடனமாடி அவரது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.