வீட்டை எதிர்த்து திருமணம் செய்தேன்.. ஆனா, அதன்பின் வாழ்க்கையே மாறிடுச்சி!! நடிகை தேவயானி..

Devayani Gossip Today Tamil Actress Actress
By Jai Jun 23, 2024 04:45 PM GMT
Report

தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை தேவயானி. முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த தேவயானி, இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்தார். திருமணமாகி இரு பெண் குழந்தைகளை பெற்று நடிப்பில் இருந்து சற்று விலகியிருந்தார்.

அதன்பின் சீரியல்களில் படங்களில் குணச்சித்திர ரோலிலும் நடித்து வரும் தேவயானி, குடும்பத்தை மீறி கல்யாணம் செய்தது பற்றி சில விஷயங்களை எமோஷனலாக கூறியிருக்கிறார். நான் கல்யாணம் பண்ணுனா ராஜகுமாரனை தான் கல்யாணம் பண்ணுவேன் என்று சொல்லி காதலிச்சு கல்யாணம் பண்ணினேன்.

வீட்டை எதிர்த்து திருமணம் செய்தேன்.. ஆனா, அதன்பின் வாழ்க்கையே மாறிடுச்சி!! நடிகை தேவயானி.. | Actress Devyani Has Spoken Openly Her Husband

ஆனால் கல்யாணம் பண்ணிய பின் வாழ்க்கை அவரை சுத்தி எனக்கு வேறுவிதமான உணர்வை கொடுத்தது. கல்யாணத்திற்கு முன் அம்மா, அப்பாவோடு அரவணைப்பில் இருந்தேன். ஆனல் கல்யாணத்திற்கு பின் ஒரு மனைவியாக நடந்துக்கணும், குடும்பத்தை பார்த்துக்கணும் என்ற பெரிய பொறுப்பு எனக்கு வந்தது.

மனைவி என்ற உணர்வு எனக்கு வித்தியாசத்தை கொடுத்து வாழ்க்கை மாறி இருந்தது. இதுவரை எங்களுடைய திருமண வாழ்க்கை நன்றாகத்தான் சென்று கொண்டிருக்கிறது என்றும் கல்யாணம் முடிந்து 22 வருடங்கள் ஆகியும் அவர் என்னை நன்றாகவே பார்த்து வருகிறார் என்றும் நடிகை தேவயானி எமோஷ்னலாக பேசியிருக்கிறார்.

Gallery