திவ்யா துரைசாமி வளர்க்கும் Pet என்ன தெரியுமா!! தேடி தேடி வருதாம்..

Viral Video Tamil Actress Actress Dhivya Duraisamy
By Edward Feb 21, 2026 12:30 PM GMT
Report

திவ்யா துரைசாமி

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் திவ்யா துரைசாமி. அதன் பின், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று அதிகம் பிரபலமானார்.

இவர் நாயகியாக நடித்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த வாழை படம் நல்ல வசூல் செய்தது வேம்பு என்ற கேரக்டரில் தன்னுடைய முழு உழைப்பையும் போட்டு நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார். சமீபத்தில் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான ஓம் காளி ஜெய் காளி என்ற தொடரில் மீனா என்ற ரோலில் நடித்திருந்தார்.

திவ்யா துரைசாமி வளர்க்கும் Pet என்ன தெரியுமா!! தேடி தேடி வருதாம்.. | Actress Dhivya Duraisamy Cute Pet Video Viral

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் திவ்யா, சில பதிவுகளை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவார். தற்போது, கையில் ஒரு காகத்தை வைத்துக்கொண்டு ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

காக்கா

அதில், காக்காவுக்கும் எனக்கு என்ன ராசி என்று தெரியவில்லை. கடந்த 3 வருடத்தில் என்னிடம் 3 காக்கா வந்திருக்கிறது. வரும் கொஞ்ச மாதம் இருக்கும் உடல் சரியாகிவிட்டதும் வளர்ந்ததும் கிளம்பி போய்விடும். இந்த வருடத்தில் இவர் தான் எண்ட்ரி. இந்த காகம் வந்து ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது.

மருத்துவர் இருந்துவிடும் என்றெல்லாம் சொன்னார்கள், ஆனால் ஐ ட்ராப்ஸ் போட்டு இப்போது சரியாக இருக்கிறான் என்று கூறி ஒரு வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளார்.