பணத்திற்காக மட்டும் இயக்குநரை தேடிதேடி சந்தித்த வாரிசு நடிகை! வேற எதுக்கும் வர்றது இல்லனு கிழிக்கும் தயாரிப்பாளர்

tamil actress cinema producer
By Jon Mar 25, 2021 06:16 PM GMT
Report

சினிமாவில் சம்பளத்திற்காக பல பிரபலங்கள் இயக்குநர்களுடனும் தயாரிப்பாளர்களுடனும் நாளுக்கு நாள் சந்தித்து கொஞ்சுவார்கள். ஆனால் அவருக்கே எதாவது பிரச்சனை என்றால் அந்த பக்கமே செல்லாமல் விட்டுவிடுவார்கள். அந்தவகையில் சமீபத்தில் பெரிய சர்ச்சையில் சிக்கியவர் தான் அந்த வாரிசு நடிகை. மூத்த நடிகரின் மகளாக தென்னிந்திய சினிமாவில் நடித்து வரும் அம்மணி தற்போது அக்கடதேசத்தில் பிஸியாக இருந்து வருகிறார்.

அதற்கு காரணம் அவர் கொடுக்கும் க்ளாமர் நடிப்புதானாம். தமிழில் முன்னணி ஹிட் நடிகருடன் நடித்து வரும் நடிகை ஆரம்பத்திலேயே பல பிரச்சனைகளை ஏற்படுத்தி வந்தார். அதற்கு பெரியளவில் யாரும் அம்மணி சப்போர்ட் செய்யாத நிலையில் சமீபத்தில் மரணமடைந்த இயக்குநர் தான் அனைத்தையும் சமாளித்தார்.

அவருடைய இறங்களுக்குக் கூட வரவில்லை அந்த வாரிசு நடிகை. அந்த இயக்குனர் அந்த நடிகையை அனைவரையும் தவறாக பேசும் போது கூட சப்போர்ட் செய்தாராம். ஆனால் அவர் இறந்த பிறகு அவரை ஒரு மனிதனாக மதித்து பார்க்ககூட வரவில்லை என்பதே பேசு பொருளாக மாறியுள்ளது.

அந்த இயக்குனர் சம்பள விஷயம் பேசும்போது மட்டும் ஒரு நாளைக்குப் பத்து முறை அவரைத் தேடி வந்த நடிகை இறந்தபோது வரவில்லை என்பது அனைவருக்குமே சங்கடத்தை கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத நடிகை தானுண்டு தன் வேலையுண்டு என்று சமுகவலைதளத்தில் க்ளாமர் புகைப்படங்களை வாரி வழங்கி வருகிறார் அம்மணி.