மாதம் ரூ. 5 கோடி வருமானம்.. ரம்யா கிருஷ்ணன் என்ன தொழில் செய்கிறார் பாருங்க

Rajinikanth Ramya Krishnan Tamil Actress
By Bhavya Feb 11, 2025 01:30 PM GMT
Report

ரம்யா கிருஷ்ணன்

இந்திய திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருப்பவர் ரம்யா கிருஷ்ணன். கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என தனது இளம் வயதில் இருந்தே முக்கிய நடிகையாக கலக்கிக்கொண்டு இருக்கிறார்.

தமிழில் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த படையப்பா படத்தில் ரஜினிக்கு வில்லியாக நடித்து அனைவரையும் அசரவைத்தார். படத்தில் ரஜினியை எதிர்த்து ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது என்பதே கடினம், அதை மிக சிறப்பாகவும், மாஸாகவும் செய்திருப்பார் ரம்யா கிருஷ்ணன்.

இதன்பின், இவர் ராஜாமாதா கதாபாத்திரத்தில் நடித்து வெளியான பாகுபலி திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ரம்யா கிருஷ்ணனுக்கு பெற்று கொடுத்தது.

மாதம் ரூ. 5 கோடி வருமானம்.. ரம்யா கிருஷ்ணன் என்ன தொழில் செய்கிறார் பாருங்க | Actress Earn Crores For A Month

குறிப்பாக இந்த படத்தில் இடம் பெற்ற 'இதுவே என் கட்டளை, என் கட்டளையே சாசனம்' என அவர் பேசிய வசனம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ரம்யா தெலுங்கு இயக்குநரான வம்சி என்பவரை 2003ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ரித்விக் வம்சி எனும் ஒரு மகனும் இருக்கிறார்.

தொழில்

தற்போது ரம்யா கிருஷ்ணன் குறித்து ஒரு அதிரடி தகவல் வெளியானது. அதாவது கேரளாவில் ரம்யாவுக்கு 5 அழகு நிலையங்கள் மற்றும் ஹைதராபாத்தில் மூன்று நகைக்கடைகள் உள்ளன. இதன் மூலம் இவருக்கு மாதம் ரூ. 5 கோடி வரை வருமானம் வருவதாக கூறப்படுகிறது.   

மாதம் ரூ. 5 கோடி வருமானம்.. ரம்யா கிருஷ்ணன் என்ன தொழில் செய்கிறார் பாருங்க | Actress Earn Crores For A Month