2 வருடம் ரிலேஷன்ஷிப்பை கழட்டிவிட்ட உலக அழகி!! ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே சென்று அராஜகம் செய்த ஆணழகன்

Gossip Today Bollywood
By Edward Apr 22, 2023 03:45 PM GMT
Report

பெண் ரசிகைகள் ஜொள்ளுவிடும் அளவிற்கு ஆணழகனாக திகழ்ந்து வந்த டாப் நடிகர் தற்போது பல நடிகைகளுடன் காதல் தொடர்பில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டார். தற்போது வரை திருமணம் செய்யாமல் இருக்க ஒரு முன்னாள் உலக அழகி நடிகை கழட்டிவிட்டதால் தான் அந்த முடிவில் இருக்கிறாராம்.

உலக அழகி பட்டத்தை பெற்று சினிமாவில் அறிமுகமாகிய அந்த நடிகையுடன் 2 வருடம் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார் அந்த ஆணழகன் நடிகர். போகப்போக சைக்கோவாக மாறியதால் அவரை கழட்டிவிட்டு சென்றிருக்கிறார் அந்த நடிகை.

இதனால் கடுப்பாகிய அந்த நடிகர், நடிகை நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே சென்று அட்டூழியம் செய்திருக்கிறார். நடிகரின் அராஜகம் அதிகமாக வேறொரு பெரிய இடத்து நடிகருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார்.

அதனால் கோபமடைந்த ஆணழகன் நடிகர் நடிகையின் வீட்டிற்கே சென்று மோசமாக நடந்து கொண்டார். நடிகை அவர் மீது புகாரளித்து, அவரது செல்வாக்கால் எதுவும் செய்ய முடிவவில்லை. அதனால் அவரின் டார்ச்சரை பொறுத்துக்கொள்ளாத அந்த நடிகை, செல்வாக்கு மிகுந்த குடும்பத்தினரின் வரணை ஏற்று திருமணம் செய்து செட்டிலாகி இருக்கிறார்.

அதன்பின் அந்த பக்கமே செல்லாமல் இருக்கும் அந்த நடிகர், 50 வயதை எட்டியும் திருமணம் செய்யாலம் தனிமரமாக இருந்து வருகிறார். ஆனால், தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் பலவித சர்ச்சைகளிலும் காதல் கிசுகிசுக்களிலும் சிக்கி வருகிறார் ஆணழகன் நடிகர்.