மூளையே இல்லாதவங்க மாதிரி கேட்டாரு!! மோசமான கேள்விக்கு நடிகை கெளரி கிஷன் ஓபன் டாக்..

Gouri G Kishan Ghibran Gossip Today Tamil Actress Actress
By Edward Nov 04, 2025 10:30 AM GMT
Report

கெளரி கிஷன்

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கௌரி ஜி கிஷன். இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

சமீபத்தில் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த அடியே, ஹாட் ஸ்பாட், போட் போன்ற படங்களில் நடித்திருந்த கெளரி, தற்போது அதர்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். வரும் 7 ஆம் தேதி இப்படம் ரிலீஸாகவுள்ளது.

மூளையே இல்லாதவங்க மாதிரி கேட்டாரு!! மோசமான கேள்விக்கு நடிகை கெளரி கிஷன் ஓபன் டாக்.. | Actress Gouri Kishan Open About Reporters Question

செய்தியாளர் சந்திப்பில், கதாநாயகன் ஆதித்யா மாதவனிடம் பாடலில் கதாநாய்கி கெளரி கிஷனை தூக்கி சுற்றி வருகிறீர்களே? அவர் ரொம்ப வெயிட்டாக இருந்தாரா என்று ஒருவர் கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு ஆதித்யா, ரொம்ப வெயிட்டாக இல்லை, நான் ஏற்கனவே ஜிம் உடலமைப்பு கொண்டவன். எனவே அவரது உடல் எடை எனக்கு பெரிதாக தெரியவில்லை என்று கூறியிருக்கிறார். இப்படி கேள்வி கேட்டபோது கெளரி கிஷன் முகம் சுளித்தபடி ரியாக்ஷன் கொடுத்தார்.

மூளையே இல்லாதவங்க

அப்படத்தின் பிரமோஷனுக்காக அளித்த பேட்டியில், பிரஷ் மீட் கேட்ட மோசமான கேள்விகள் பற்றி வேதனையுடன் பதிலளித்துள்ளார். அதில், பத்திரிக்கையாளர் செய்தது ரொம்ப தவறு, மூளை இல்லாதவர் போல் பேசியிருக்கிறார்.

மூளையே இல்லாதவங்க மாதிரி கேட்டாரு!! மோசமான கேள்விக்கு நடிகை கெளரி கிஷன் ஓபன் டாக்.. | Actress Gouri Kishan Open About Reporters Question

நான் அவர் நம்பர் வாங்கி பேசலாம் என்று நினைத்தேன். அது வெறும் ஆர்க்யூமெண்ட்-ஆக மாறுமே தவிர அதனால் அவர் மாறப்போவது இல்லை, அவர் ஏன் அந்த வேலையை செய்தார் என்று தெரியவில்லை.

நான் அவருடைய எடையை கேட்டால் எப்படி இருக்கும், நாளைக்கே இன்னொரு நடிகையிடம் அவர் கேட்பார், நான் ஷாக்காகிவிட்டேன்.

நான் வேலை செய்திருக்கிறேன், கஷ்டப்பட்டு இருக்கிறேன், அதை பற்றி அவர் கேட்கவில்லை, தேவையில்லாத கேள்வி. நீ பொண்ணு, கலர் போட்டு ட்ரெஸ் போட்டு வந்திருக்கன்னு கேட்கிறார்கள் என்று கெளரி கிஷன் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

மேலும் அவர் பகிர்ந்து கொண்ட கருத்துக்களை இந்த காணொளியில் காணலாம்...