அஜித்துடன் நடித்து வாழ்க்கையை இழந்த 26 வயது நடிகை.. இதெல்லாம் உண்மையா

Ajith Kumar Lakshmi Menon
By Kathick Jun 24, 2022 11:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் அஜித் குமார். இவருடைய நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் AK 61. எச்.வினோத் இயக்கி வரும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.

மஞ்சு வாரியர் இப்படத்தின் மூலம் அஜித்துடன் இணைந்து நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், வருகிற டிசம்பர் மாதம் AK 61 திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் நடிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் பல உண்டு. இதில் ஒன்று தான் வேதாளம். சிறுத்தை சிவா இயக்கியிருந்த இப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.

இப்படத்தில் அஜித்துக்கு தங்கையாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். இப்படத்தில் நல்ல வரவேற்பை பெற்ற லட்சுமி மேனனுக்கு இதன்பின் ஒருசில முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது.

ஆம், வேதாளம் படத்திற்கு பிறகு நடிகை லட்சுமி மேனன்னுக்கு பெரிதளவில் வாய்ப்புகள் வரவில்லை. தொடர்ந்து பட வாய்ப்பு இல்லாமல் தற்போது வரை தவித்து வருகிறார் நடிகை லட்சுமி மேனன்.

அஜித்துடன் இணைந்து நடித்தபிறகு தான் லட்சுமி மேனனுக்கு இப்படி ஆகியதா என்றும் மற்ற நடிகர்களின் ரசிகர்கள் மீம்ஸ் போட்ட கலாய்த்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.