அந்த பிரபலத்துக்கு ஆசைப்படும் நடிகை இந்துஜா!! அவரே கூறிய உண்மை..
Indhuja Ravichandran
Gossip Today
Shubman Gill
By Jai
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை இந்துஜா. இவர் நடிகர் வைபவ் நடிப்பில் கடந்த 2017 -ம் ஆண்டு வெளியான மேயாத மான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.கடைசியாக இவர் தனுஷின் நானே வருவேன் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் பார்க்கிங் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள இந்துஜா, எனக்கு இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் மீது கிரஷ் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஐஏஎஸ் அதிகாரியாக ஆசைப்பட்டதாகவும் விட்டுக்கு சொல்லாமல் சென்னை வந்ததாகவும் ஓப்பனாக தெரிவித்துள்ளார்.