நான் ஆண்ட்டி நடிகையா? பாடி ஷேமிங் பண்ணாதீங்க!! நடிகை இனியா பதிலடி..

Tamil Actress Actress
By Edward Feb 18, 2026 09:45 AM GMT
Report

நடிகை இனியா

குழந்தை நட்சத்திரமாக மலையாள தொலைக்காட்சி தொடர்களிலும் குறும்படங்களிலும் நடித்து ஹீரோயினாக அறிமுகமாகியவர் தான் நடிகை இனியா. வாகை சூட வா படத்தில் கிராமத்து இளம்பெண்ணாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த இனியா, நான் சிகப்பு மனிதன், புலிவால் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

இதனையடுத்து பல படங்களில் நடித்து வந்த இனியா, ஸ்வீட்டி நாட்டி கிரேசி என்ற படத்தில் நடித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். இப்படத்தில் படுக்கையறை காட்சியில் தாராளமாக நடித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் இப்படத்தில் உடல் எடையை ஆதிகரித்து ஆளே மாறியபடி நடித்துள்ளார். சில ஆண்ட்டிபோல் மாறிவிட்டார் என்று கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

பாடி ஷேமிங் பண்ணாதீங்க

சமீபத்தில் அவரிடம் வாகை சூட வா படத்தில் ஒல்லியாக இருந்தீங்க, இப்போ உடல் எடை அதிகரித்து ஆண்ட்டியாக மாறிவிட்டீர்கள், இதனால் தான் படவாய்ப்பு வரவில்லையா என்று செய்தியாளர் ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு இனியா, நான் தொடர்ந்து ஹீரோயினாக நடித்துக்கொண்டு தான் இருக்கிறேன். எனக்கு அண்மையில் கால் மற்றும் தோள்பட்டையில் ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. என்னால் சரியாக உடற்பயிற்சி செய்ய முடியாமல் போனது. இதனால் உடல் எடை அதிகரித்துவிட்டது. ஒரு நடிகை குண்டாடிவிட்டார் என்பதற்காக அவர் ஆண்ட்டி, அக்கா ரோல்களில் தான் நடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. குண்டாக இருப்பது பெரிய தவறு இல்லை. ஒல்லியாக இருந்த பல நடிகைகள் இப்போது இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்கள், ஆனால் நான் இப்பொழுதும் படங்களில் நடித்துக்கொண்டு தான் இருக்கிறேன் என்று பதிலடியாக கொடுத்துள்ளார் நடிகை இனியா.