அது மட்டும் வேண்டாம்.. கீர்த்தி சுரேஷை எச்சரித்த சிவகார்த்திகேயன் பட நடிகை

Kalyani Priyadarshan Keerthy Suresh Tamil Cinema Actress
By Bhavya Dec 20, 2024 12:30 PM GMT
Report

கீர்த்தி சுரேஷ் 

நடிகை கீர்த்தி சுரேஷ் 15 வருடமாக ஆண்டனி என்பவரை காதலித்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் 12ம் தேதி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

முதலில் கோவாவில் ஹிந்து முறைப்படி இந்த திருமணம் நடந்து முடிந்தது. அதில் விஜய், த்ரிஷா, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்துகொண்டனர்.

அது மட்டும் வேண்டாம்.. கீர்த்தி சுரேஷை எச்சரித்த சிவகார்த்திகேயன் பட நடிகை | Actress Inform Not To Post Pictures

அதன் புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது. கீர்த்தி சுரேஷ் கணவர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் கீர்த்தி சுரேஷ் திருமணம் சர்ச்சில் நடைபெற்றது.

பதிவு 

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் கலந்து கொண்ட நடிகை கல்யாணி பிரியதர்ஷன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு அதற்கு கீழ் ஒரு வைரலான பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், " உங்களின் திருமணம் உங்கள் காதல் போன்று மிகவும் அழகாக இருந்தது. திருமணத்தில் இருவருமே மிகவும் அழகாக இருந்தீர்கள்.

அது மட்டும் வேண்டாம்.. கீர்த்தி சுரேஷை எச்சரித்த சிவகார்த்திகேயன் பட நடிகை | Actress Inform Not To Post Pictures

ஆனால், உங்கள் திருமணத்தில் நான் அழும் புகைப்படங்களை நீங்கள் ரிலீஸ் செய்தால் உங்களைக் கொன்றுவிடுவேன்" என பேரன்போடு பதிவிட்டுள்ளார். தற்போது, இந்த பதிவு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.