ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் ப்யூர் கோல்டன் லுக்!! டிரெண்ட்டாகும் புகைப்படங்கள்..

Janhvi Kapoor Indian Actress Marriage Actress Anant Ambani
By Edward Jul 13, 2024 03:30 PM GMT
Report

அம்மா நடிகை ஸ்ரீதேவி, அப்பா பிரபல திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் என்பதால் திரைத்துறையில் எளிதாக நுழைந்தவர் தான் ஜான்வி கபூர். ஆரம்பத்தில் மாடலிங் செய்துகொண்டு இருந்த ஜான்வி, தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். ஜான்வி, தேவாரா என்ற தெலுங்கு படத்தின் மூலமாக தென்னிந்திய சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் ப்யூர் கோல்டன் லுக்!! டிரெண்ட்டாகும் புகைப்படங்கள்.. | Actress Janhvi Kapoor Golden Look Ambani Fuction

விரைவில் தமிழ் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேவாரா பார்ட் 1, Ulajh, Sunny Sanskari Ki Tulsi Kumari போன்ற படங்களில் கமிட்டாகி அடுத்தடுத்து லைன் அப்பில் இருந்து வருகிறார்.

நடிப்பு ஒருபக்கம் இருந்தாலும் ஜான்வி கபூர் அதிகம் பிரபலம் ஆக காரணமே கவர்ச்சியான போட்டோஷூட் தான். அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு சென்சேஷனலாக வலம் வந்துகொண்டு இருக்கிறார்.


சமீபத்தில் நடந்து வரும் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமண நிகழ்வுகளுக்கு கிளாமர் ஆடையணிந்து சென்று வருகிறார். தற்போது ப்யூர் தங்க நிறத்தால் ஆன ஆடையில் கிளாமர் லுக்கில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.