பிடிச்சா ஒகே..பிடிக்கலனா நோன்னு சொல்வேன்..காஸ்டிங் கவுச் பற்றி பேசிய நடிகை...
நடிகை ஜோதி
நடிகைகள் பலர் தனக்கு நடந்த காஸ்டிங் கவுச் சம்பவங்கள் குறித்து ஓபனாக பகிர்ந்து வருவது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அந்தவகையில் தெலுங்கு சினிமாவில் நடித்து பிரபலமான நடிகை ஜோதி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் காஸ்டிங் கவுச் குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

பிடிச்சா ஒகே..பிடிக்கலனா நோ
அதில், ஒரு கதாபாத்திரத்திற்கான தேர்வு, நடிகர்களின் திறமையை அடிப்படையாக கொண்டு இருக்கவேண்டும். தனிப்பட்ட நலன்களுக்காக அல்ல, தனிப்பட்ட விஷயங்கலை தொழிலுடன் சேர்க்கக்கூடாது.
எனக்கு பிடித்தது என்றால் பிடிக்கும் என்று சொல்வேன், பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று சொல்வேன். இதனால் சில வாய்ப்புகளை இழந்ததாகவும் சிலர் இதை பார்த்து கதாபாத்திரங்கள் வழங்க தயங்குவதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும் நீங்களே(பெண்கள்) உங்களுக்காக நிற்காவிட்டால், உங்கள் பலவீனங்களை பயன்படுத்த முயல்வார்கள். அதனால் தைரியமாக இருங்கள் என்று நடிகை ஜோதி தெரிவித்துள்ளார்.