அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை!! அவுங்க கூட நடித்தால் மட்டும் பாதுகாப்பாக இருக்கு.. ஜோதிகா பேட்டி
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயின்களுக்கு நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை ஹாட்டாபிக்காக சென்று கொண்டு இருக்கிறது.
இயக்குனர் சீனு ராமசாமி நடிகை மனிஷா யாதவை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்ற குற்றச்சாற்றை முன் வைத்தார் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி.
மேலும் சீனு ராமசாமி மனிஷா யாதவ் மட்டுமின்றி பிந்து மாதவி உடனும் தவறாக நடந்து கொண்டதாக கூறப்பட்டது. இது ஒரு பக்கம் இருக்க, விசித்ரா - பாலா கிருஷ்ணா பிரச்சனை மறுபக்கம் ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் தற்போது எந்த நடிகர்களுடன் நடிக்க comfortable ஆக இருக்கிறது என்று ஜோதிகா சொன்ன வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
அதில் அவர் , எல்லா ஹீரோக்களுடன் நடிக்க comfortable ஆக இருக்காது. என்னுடைய கேரியரில் அஜித், சூரிய , மாதவன் உடன் சேர்ந்து நடிக்கும் போது comfortable ஆக இருக்கும் என்று ஜோதிகா கூறியுள்ளார்.