இவ்ளோ திட்டிட்டு.. விஜயகாந்த் மறைவிற்கு வராதது ஏன்? வருத்தப்பட்ட வடிவேலு!
விஜயகாந்த்
தமிழ் சினிமாவில் கேப்டன் என அனைவராலும் அழைக்கப்பட்டு, தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டவர் நடிகர் விஜயகாந்த். இவர் சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் மாபெரும் வெற்றியை கண்டவர்.
மக்களுக்காக பல உதவிகளை செய்த விஜயகாந்த் கடந்த 2023ம் ஆண்டு காலமானார். இவருடைய மறைவு பெரும் அதிர்ச்சியை மக்களுக்கு தந்தது.
விஜயகாந்த் இறப்பில் ஏராளமான பிரபலங்கள் இறுதிய அஞ்சலி செலுத்த வந்தார்கள், ஆனால் கேப்டனால் திரையுலகில் அதிக வாய்ப்புகள் பெற்று வளர்ந்த வடிவேலு வரவில்லை என்பது பெரிய விவாதமாக இருந்தது.

வராதது ஏன்?
இந்நிலையில், வடிவேலு மாரீசன் படப்பிடிப்பின்போது அவருக்கு மகனாக நடித்த குரு லக்ஷ்மனிடம் விஜயகாந்த் குறித்து பேசியுள்ளார்.
அதில், " மனுஷன் இறந்ததுக்கு கூட என்னால் போக முடியவில்லை, நான் போய் இருக்கலாம். நான் போய் இருந்தாலும் அவரை இவ்ளோ திட்டிட்டு எதுக்கு வந்தான்னு தப்பா தான் பேசுவாங்க. ஆனால் மனதார கூறுகிறேன், அவர் சொர்கத்தில் இருப்பார்" என தெரிவித்துள்ளார்.