பாலிவுட் படத்துக்காகவா? உடற்பயிற்சி செய்வதை கேலி செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த ஜோதிகா..

Jyothika Gymnastics Indian Actress Actress
By Jai May 14, 2026 07:00 AM GMT
Report

ஜோதிகா

தென்னிந்திய சினிமாவில் 90களில் டாப் நடிகையாக திகழ்ந்து தற்போது பாலிவுட்டில் கால் பதித்துள்ள நடிகை தான் நடிகை ஜோதிகா. சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோதிகா, சினிமாவில் இருந்து விலகி இரு குழந்தைகளுக்கு தாயானார்.

பாலிவுட் படத்துக்காகவா? உடற்பயிற்சி செய்வதை கேலி செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த ஜோதிகா.. | Actress Jyothika Sippershot Fans Troll Gym Workout

தன் பிள்ளைகளை வளர்த்து, தற்போது வளர்ந்துள்ள நிலையில், சினிமாவில் மீண்டும் நடிக்க காலெடி எடுத்து வைத்திருக்கிறார். ஆரம்பத்தில் தமிழில் கவனம் செலுத்திய ஜோதிகா, மலையாளம், இந்தி மொழிப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

சோனாக்ஷி சின்ஹா, ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள System என்ற அமேசான் பிரைம் வெப் தொடர் மே 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும் ஆரோக்கியமாக இருக்கவும் உடற்பயிற்சி மேற்கொண்டும் வருகிறார் ஜோதிகா.

பாலிவுட் படத்துக்காகவா? உடற்பயிற்சி செய்வதை கேலி செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த ஜோதிகா.. | Actress Jyothika Sippershot Fans Troll Gym Workout

பாலிவுட் படத்துக்காகவா

அந்த வகையில் தீவிர உடற்பயிற்சி மேற்கொண்ட வீடியோவை பகிர்ந்த ஜோதிகாவின் அந்த பதிவில் ஒரு ரசிகர், மேடம் பாலிவுட் படத்துக்கு தான் ஒர்க் அவுட் பண்றாங்க என்று கேலி செய்து கருத்தினை பதிவிட்டார். அதை பார்த்த ஜோதிகா, அதற்காக அல்ல, என்னுடைய வயதான காலத்திற்காக என்று தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். இதற்கு பலரும் ஜோதிகாவை பாராட்டி வருகிறார்கள்.

Gallery