ஹனிமூனில் ஏற்பட்ட உடம்பு வலி, அதற்கு மறுத்த அஜய் தேவ்கன்!! ஓபன்னாக பேசிய கஜோல்..
பாலிவுட் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் தான் கஜோல் - அஜய் தேவ்கன் தம்பதி. இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பின்பும் கஜோல் மற்றும் அஜய் தேவ்கன் சினிமாவில் பிஸியாக இருந்து வருகிறார்கள். சமீபத்தில் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளிவந்த மைதான் திரைப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்கு முன்பு அஜய் தேவ்கனுக்கு ஒரு நிபந்தனை வைத்து இருக்கிறார் கஜோல். அது என்னவென்றால், 2 மாதங்கள் தேனிலவுக்காக வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும். இதற்கு ஓகே என்றால் திருமணத்திற்கு சம்மதிப்பேன் என்று கூறியிருக்கிறார். அஜய் தேவ்கனும் ஓகே சொல்லி இருக்கிறார்.
திருமணம் முடிந்ததும் சொன்னபடி தேனிலவுக்கு கிளம்பியிருக்கிறார்கள் கஜோல் - அஜய் தேவ்கன். அனல் ஒவ்வொரு நாடாக செல்லச் செல்ல அஜய் தேவ்கனுக்கு முடியவில்லையாம்.
இதனால் 40 நாட்கள் முடிந்த நிலையில், எனக்கு உடம்புக்கு சரியில்லை, வீட்டுக்கு செல்லலாம் என்று அஜய் தேவ்கன் அடம் பிடித்ததாக கஜோல் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.