அந்த நடிகர்கள் மிகவும் மோசமானவர்கள் தான்..ஆனால் எனக்கு!! நடிகை கங்கனா ரனாவத் ஓபன்..
கங்கனா ரனாவத்
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாகவும் பாஜக சார்பாக மக்களவைத்தேர்தலில் போட்டியிட்டு எம்பிகா இருப்பவருமான கங்கனா ரனாவத், பாலிவுட் நடிகர்கள் பற்றி கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
சமீபத்தில் கங்கனா அளித்த பேட்டியில், பாலிவுட்டில் பெரும்பாலான நடிகர்கள் அநாகரீகமானவர்கள், ஆனால் அவர்களால் நான் பாதிக்கப்பட அனுமதித்ததில்லை என்று தெரிவித்துள்ளார்.
நான் பல நடிகர்களுடன் நடித்திருக்கிறேன், ஆனால் இந்த நடிகர்கள் மிகவும் அநாகரீகமானவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் எனக்கு கவலையாக இருக்கிறது.
பாலியல் தொல்லையை மட்டும் நான் சொல்லவில்லை. படப்பிடிக்கு மிகவும் தாமதமாக வருவது, மோசமாக நடந்து கொள்வது, நடிகைகளை கீழ்த்தரமாக நடத்துவது, ஓரங்கட்டுவது என்று இருப்பார்கள்.
நடிகைகளுக்கு சிறிய கேரவன் கொடுப்பார்கள். இவ்விவகாரத்தில் நான் பல சிக்கல்களை சந்தித்திருக்கிறேன். என் மீது புகாரும் கொடுத்திருக்கிறார்கள்.