பாடாய்படுத்திய புற்றுநோய், மார்பகத்தை நீக்கிய மருத்துவம்!! நடிகை கனிகா வேதனை..

Serials Kaniha Tamil TV Serials Tamil Actress Actress
By Dhiviyarajan Dec 19, 2023 05:22 AM GMT
Report

கடந்த 2002 -ம் ஆண்டு வெளிவந்த 'பைவ் ஸ்டார்' என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் தான் நடிகை கனிகா.

இதைத்தொடர்ந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு எனப் பல மொழி படங்களில் நடித்து வந்தார். தற்போது கனிகா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பாடாய்படுத்திய புற்றுநோய், மார்பகத்தை நீக்கிய மருத்துவம்!! நடிகை கனிகா வேதனை.. | Actress Kaniha Mother Suffered From Breast Cancer

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட கனிகா தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், " ஒரு நாள் என்னுடைய அம்மாவுக்கு மார்பகத்தில் வலி ஏற்பட்டது. என்னை போனில் அழைத்து இது பற்றி என்னிடம் சொன்னார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். பல கட்ட சோதனைக்கு பிறகு அவருக்கு புற்றுநோய் இருப்பது எனக்கு தெரியவந்தது. இந்த செய்தி என்னை அதிர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்று விட்டது".

"சிகிச்சையின் போது என் அம்மா பட்ட வேதனைகளை பார்த்து நான் மிகவும் நொந்து போனேன். அவருடைய பாதுகாப்பாக மார்பகத்தை நீக்கினார்கள். அதை எல்லாம் பார்க்கும் போது எனக்கு கஷ்டமாகிவிட்டது" என்று கனிகா கூறியுள்ளார்.