ஸ்கூல் படிக்க கூட பணமில்லை..இப்போ ரூ. 800 கோடி பங்களாவில் டாப் நடிகை!!

Bollywood Indian Actress Kareena Kapoor Khan Net worth Saif Ali Khan
By Edward Jul 06, 2025 03:30 AM GMT
Report

ரூ. 800 கோடி பங்களா

அன்று கல்விக்கட்டணத்தை கட்டமுடியாமல் பொருளாதார சிக்கலில் தவித்த நடிகை, இப்போது ரூ. 800 கோடி பங்களாவில் வசிக்கிறார். அதிலும் பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்கிறாராம்.

ஸ்கூல் படிக்க கூட பணமில்லை..இப்போ ரூ. 800 கோடி பங்களாவில் டாப் நடிகை!! | Actress Kareena Kapoor Unknown Fact Details

ஷாருக்கான், சல்மான் கான் உள்ளிட்ட முன்னணி சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் நடித்து இப்போது கோடிகளில் புறளும் நடிகையாக திகழ்பவர் தான் நடிகை கரீனா கபூர்.

கரீனா கபூர்

2000 ஆண்டில் ரெப்யுஜீ என்ற படத்தில் அறிமுகமாகிய கரீனா, அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்து பிரபலமானார். அவரது மூத்த சகோதரி கரிஷ்மா ஆவார். சமீபத்தில் அவரது தந்தை ரந்திரி அளித்த பேட்டியில், இரு மகள்களின் பள்ளிக்கட்டணத்தை கூட கட்டமுடியாமல் கஷ்டப்பட்டதாக தெரிவித்தார்.

ஸ்கூல் படிக்க கூட பணமில்லை..இப்போ ரூ. 800 கோடி பங்களாவில் டாப் நடிகை!! | Actress Kareena Kapoor Unknown Fact Details

அதனை தொடர்ந்து கரீனா கபூர், "நாங்கள் பாரம்பரிய திரையுலக குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும், ஒருசமயத்தில் வறுமையில் இருந்தோம். அப்போது என் சகோதரி கரிஷ்மா லோக்கல் டிரைன் மற்றும் பேருந்துகளில் தான் கல்லூரிக்கு செல்வார். அப்போது பொருளாதார சிக்கலில் இருந்தோம் என்று தெரிவித்தார்.

ஸ்கூல் படிக்க கூட பணமில்லை..இப்போ ரூ. 800 கோடி பங்களாவில் டாப் நடிகை!! | Actress Kareena Kapoor Unknown Fact Details

சொத்து மதிப்பு

ஆனால் அப்போது கஷ்டத்தில் இருந்த கரீனா கபூர் ரூ. 800 கோடி மதிப்பில் இருக்கும் பங்களாவில் வாழ்ந்து வருகிறார். ஒரு படத்திற்கு 12 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் வாங்கும் கரீனா கபூரின் சொத்து மதிப்பு ரூ. 400 முதல் 500 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

1300 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கும் சைஃப் அலிகானின் மனைவியாகவும் திகழ்கிறார் கரீனா கபூர்.