காதல் கணவருடன் ஹனிமூன் சென்றுள்ள நடிகை கார்த்திகா நாயர்- எங்கே பாருங்க

Radha Tamil Cinema
By Yathrika Dec 19, 2023 07:30 AM GMT
Report

கார்த்திகா நாயர்

தமிழ் சினிமாவில் 80களில் கனவு நாயகியாக வலம் வந்தவர் நடிகை ராதா. 10 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நடிகை ராதா உச்சத்தில் இருந்த போதே திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.

இவருக்கு 1991ம் ஆண்டு ராஜசேகர் என்பவருடன் திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவரது இரண்டு மகள்களும் சினிமாவில் சில படங்களே நடித்தார்கள், அதன்பிறகு இந்த பக்கம் காணவில்லை.

ராதாவின் மூத்த மகள் கார்த்திகாவிற்கு அண்மையில் ரோஹித் மேனன் என்பவருடன் திருமணம் நடந்தது. கேரளாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் கோலிவுட் மற்றும் பாலிவுட் வரை ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

இந்த நிலையில் திருமணம் முடிந்த கையோடு கார்த்திகா தனது காதல் கணவருடன் ஹனிமூன் சென்றுள்ளார். காதலர்களின் கனவு தேசமான பாரிசுக்கு சென்றுள்ளனர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் கார்த்திகா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.