கீர்த்தி சுரேஷ்-ஆ இது!! சேலையில் ரசிகர்களை மயக்கும் போஸில் வெளியிட்ட புகைப்படங்கள்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
தற்போது பாலிவுட் சினிமாவில் இயக்குனர் அட்லீ இயக்கி வெற்றி படமாக அமைந்த தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் சமந்தா ரோலில் வருண் தவானுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
அட்லீ தயாரிப்பில் Kalees என்ற இயக்குனர் BabyJohn என்ற பெயரில் இயக்கி வருகிறார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் ஒரு காட்சியில் போல்ட்-ஆக நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியானது.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது, திருமண நிகழ்ச்சிக்கு மணப்பெண் தோழியாக இருந்துள்ளார். அங்கு அவர் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்கள் தன் பக்கம் ஈர்த்திருக்கிறார்.






