த்ரிஷா, ஸ்ருதிஹாசனுடன் அந்த பட்டியலில் இணைந்த கீர்த்தி சனோன்.. என்ன?
கீர்த்தி சனோன்
பொதுவாக உடலில் பச்சை குத்தி கொள்வதை நடிகைகள் என பலர் வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால், ஒரு சில நடிகைகள் மட்டும் தான் பச்சை குத்தி கொள்வதில்லை.
அதில், ஒரு நடிகை தான் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன். பாலிவுட்டின் திறமையான மற்றும் அழகான நடிகை என பெயர் பெற்றவர் க்ரித்தி.
இவர் 1: Nenokkadine என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின் பாலிவுட் பக்கம் சென்ற க்ரித்தி சனோனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதை தொடர்ந்து, தில்வாலே, ஹவுஸ்ஃபுல் 4, மிமி, ஆதிபுருஷ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார். மேலும் தற்போது தனுஷுடன் இணைந்து Tere Ishk Mein என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
என்ன?
இந்நிலையில், தற்போது கீர்த்தி முதல் முறையாக பச்சை குத்தி உள்ளார். அது தொடர்பான புகைப்படங்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், அந்த புகைப்படங்களுக்கு கீழே "நான் இப்படி செய்வேன் என்று நினைத்ததே இல்லை.
கண்களில் கனவுகளுடன் இருக்கும் எல்லோரும், நீங்கள் பயப்படும் அந்த முடிவை எடுங்கள்..அது எளிதாக இருக்காது, இருப்பினும் நீங்கள் பறக்கக் கற்றுக்கொள்வீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.