9 மணி நேரம்.. ஹேக் செய்யப்பட்ட நடிகை குஷ்பூவின் எக்ஸ் தளம்

Twitter Instagram Kushboo Actress
By Bhavya Apr 19, 2025 11:30 AM GMT
Report

குஷ்பூ

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் குஷ்பூ. கதாநாயகியாக கலக்கிக்கொண்டிருந்த இவர் தற்போது அரசியல், சீரியல் மற்றும் பட தயாரிப்பிலும் பிஸியாக இருக்கிறார்.

தமிழில் வருஷம் 16 திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி 80 மற்றும் 90களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் நாயகியாக வலம் வந்தார் குஷ்பு.

பீக்கில் இருந்தபோதே இயக்குநர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு அவந்திகா மற்றும் அனந்திடா என இரு மகள்கள் உள்ளனர்.

9 மணி நேரம்.. ஹேக் செய்யப்பட்ட நடிகை குஷ்பூவின் எக்ஸ் தளம் | Actress Kushboo Twitter Account Got Hacked

ஹேக்

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் குஷ்புவின் ட்விட்டர் தளம் தற்போது ஹேக் செய்யப்பட்டு உள்ளதாக தனது இன்ஸ்டா தளம் மூலம் தெரிவித்து ஷாக் கொடுத்துள்ளார்.

கடந்த 9 மணி நேரமாக குஷ்புவின் எக்ஸ் தளம் முடங்கியிருப்பதாக தனது இன்ஸ்டா தளம் மூலம் தெரிவித்துள்ளார். தற்போது இந்த செய்தியால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.