ஒரே அறையில் 36 ஆண்டுகள் தனிமை!! நிஜ நீலாம்பரியாக வாழ்ந்து உயிரைவிட்ட பிரபல நடிகை..
இந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 3 தசாப்தங்களாக ஆண்டு வந்த நடிகை, ஒரு இருண்ட அறையில் யாருக்கும் தெரியாமல் இறந்துகிடந்த சோகம் அரங்கேறியுள்ளது. 36 ஆண்டுகளாக அறையில் இருந்து வெளியே வராமல் முகத்தை மூடியபடி இருந்துள்ளார் ஒரு நடிகை.
சுசித்ரா சென்
அவர் தான் 1931ல் வங்கதேசத்தின் பப்னாவில் பிறந்த நடிகை சுசித்ரா சென். 1952ல் சேஷ் கோதே என்ற பெங்காலி படத்தில் நடிக்க ஆரம்பித்து, பாலிவுட்டில் அறிமுகமாகினார்.
60க்கும் மேற்பட்ட படங்களில் சுசித்ரா சென் நடித்து 1972ல் பத்ம ஸ்ரீ விருதினையும் வாங்கினார். சாத் பக்கே பண்டா என்ற படத்தில் நடித்ததற்காக சுசித்ரா சென்னுக்கு, சிறந்த சர்வதேச திரைப்பட விருது பெற்றதன் மூலம், இந்த கெளரவத்தை பெற்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையை பெற்றார் சுசித்ரா சென்.
இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டாலும், அவரது கணவரும், மாமியாரும் திரைத்துறையில் தொடர்ந்து பணியாற்ற மிகவும் உறுதுணையாக இருந்துள்ளனர். இதனால் சுசித்ரா தன் சினிமா வாழ்வில் தீவிரமாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவருக்கு ஆபத்தாக மாறிவிட்டது.
ஒரே அறையில் 36 ஆண்டுகள்
தன் குடும்பத்திற்கும் கணவருக்கும் போதுமான நேரத்தை ஒதுக்கமுடியவில்லை என்பதால் தூரம் அதிகரித்து சண்டைகள் தொடங்கின. பின் கணவர் மதுவுக்கு அடிமையாக சுசித்ராவை விட்டு அமெரிக்கா சென்றுவிட்டார்.
கணவர் 1970ல் இறந்த காரணத்தால் சுசித்ரா படிப்படியாக படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு, 36 ஆண்டுகளாக ஒரு அறையில் தன்னை பூட்டிக்கொண்டார். யாரையும் உள்ளே அனுமதிக்காமல் சுசித்ராசென் 83 வயதில் அதே இருண்ட அறையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்று கூறப்படுகிறது.