நடிகர்களின் போலி காதல்..என் புருஷன் வழுக்கை தலைதான், அதுக்கு என்ன?..நடிகை மதுபாலா வெளிப்படை

Madhoo Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Dec 07, 2023 02:45 PM GMT
Report

90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மதுபாலா. இவர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் 1991 -ம் ஆண்டு வெளியான அழகன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து ரோஜா, ஜென்டில்மேன், செந்தமிழ்ச்செல்வன் போன்ற பல ஹிட் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.  

மதுபாலா 1999-ம் ஆண்டு ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அமையா மற்றும் கெயா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

நடிகர்களின் போலி காதல்..என் புருஷன் வழுக்கை தலைதான், அதுக்கு என்ன?..நடிகை மதுபாலா வெளிப்படை | Actress Madhubala Open Talk

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மதுபாலா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், நான் சினிமாவில் அறிமுகம் ஆகும் போது ஒரு நடிகரை தான் திருமணம் செய்வேன் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் எனக்கு கிடைத்த சில அனுபவங்கள் ஒரு நடிகரை மட்டும் திருமணம் செய்துவிடக்கூடாது என்ற எண்ணத்தை உருவாக்கிவிட்டது.

ஆனந்திற்கு ஃபேண்டசியாக எல்லாம் காதலிக்க தெரியாது. ஆனால் அவர் காதலுக்கு உண்மையாக இருப்பார். ஒவ்வொரு சண்டையிலும் அவரிடம் நான் எல்லை மீறி பேசினாலும் அதை புரிந்துகொண்டு என்னிடம் சரியாக அணுகுவார்.

அவருக்கு முடி இல்லாதது அவருக்கு தாழ்வு மனப்பான்மையை கொடுத்திருந்தது. என்னிடம் காதலை சொல்லும்போதுகூட அவருக்கு முடி இல்லை. ஆனால் அது எனக்கு ஒரு பிரச்னையாக தெரியவில்லை என்று மதுபாலா கூறியுள்ளார்.