ரவீந்தர் மனைவி மகாலட்சுமியா இது!! அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்..
ரவீந்தர் மனைவி மகாலட்சுமி
சின்னத்திரை சீரியல் நடிகையாக பிரபலமாகி தற்போது வரை நடித்து வரும் நடிகை மகாலட்சுமி, சில ஆண்டுகளுக்கு முன் தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார்.
இதனையடுத்து ரவீந்தர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றபோது அவரை பற்றி பெருமையாக பல பதிவுகளை பகிர்ந்து வந்தார். இதற்கிடையில் பல விமர்சனங்களையும் பிரச்சனைகளையும் சந்தித்து வந்த மகாலட்சுமி, அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் தன் கணவர் ரவீந்தரின் பிறந்தநாளுக்கு தன் மகனுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.
மேலும் உண்மையான வெர்ஷன் விரைவில் வரப்போகிறது, நாங்கள் மனரீதியாக மிகவும் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற கேப்ஷனுடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் மகாலட்சுமி.
போட்டோஷூட்
போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி வரும் மகாலட்சுமி, சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.