ரவீந்தரை 2-ஆம் திருமணம் செய்து கொண்ட நடிகை மகாலட்சுமி!! வைரலாகும் முதல் கணவரின் மகன் புகைப்படம்

Serials Ravindar Chandrasekaran Mahalakshmi Tamil TV Serials Actress
By Edward Aug 09, 2023 04:00 AM GMT
Report

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக ஆரம்பித்து தற்போது சீரியல் நடிகையாக பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.

மகனுடன் வாழ்ந்து வந்த மகாலட்சுமி இடையில் சீரியல் நடிகை ஈஸ்வருடன் காதலில் இருந்து சர்ச்சையில் சிக்கினார். ஈஸ்வரின் மனைவி பிரச்சனை செய்ததால் அவரைவிட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார் மகாலட்சுமி.

அதன்பின் பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகரை இரு ஆண்டுகளாக ரகசிய காதலில் இருந்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். யாரும் எதிர்பார்க்காத மகாலட்சுமி - ரவீந்தர் திருமணம் பெரியளவில் பேசப்பட்டது.

விமர்சனங்களை காதில் போடாமல் சந்தோஷமாக வாழ்ந்து வரும் புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார். சீரியலில் தொடர்ந்து நடித்து வரும் மகாலட்சுமி இன்ஸ்டாகிராமில் விளம்பரத்திற்காக புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்தும் வருகிறார்.

சில நாட்களுக்கு முன் மகாலட்சுமியின் முதல் கணவரின் மகன் சச்சினுக்கு பிறந்த நாள் கொண்டாடி கேக் வெட்டும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் மகாலட்சுமி.