நடிகர் அஜித் ஒரு.. AK குறித்து 47 வயது நடிகை கூறிய தகவல்
By Kathick
நடிகர் அஜித் குறித்து திரையுலகில் உள்ள பலரும் தங்களது கருத்துக்களை பகிர்வார்கள். அதே போல் அவருடன் பணியாற்றிய பலரும் அவர் எப்படி என்பது குறித்து பேட்டிகளில் கூறியுள்ளனர்.
அந்த வகையில், அஜித்துடன் உல்லாசம் திரைப்படத்தில் இணைந்து நடித்த நடிகை மஹேஸ்வரி சமீபத்திய பேட்டியில் அஜித் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது "அஜித் சார் ஒரு ஜென்டில்மேன். அவர் க்யூட், அழகு, சூப்பர்ஸ்டார் என்பதை விட, நல்ல மனிதர். அவர் கலாச்சாரம் தெரிந்து, நன்கு வளர்க்கப்பட்ட ஒருத்தர். எப்பவும் மற்றவர்களை பற்றி யோசிப்பார். நிறைய பேர் அப்படி இருக்க மாட்டாங்க" என கூறியுள்ளார்.
AK குறித்து நடிகை மஹேஸ்வரி பேசியது தற்போது சமூக வலைத்தளங்களில் படுவைரலாகி வருகிறது.