அந்த சமயத்தில் அந்த நடிகருடன் இருந்தால்!! நடிகை மாளவிகா மோகனன் பதில்..
மாளவிகா மோகனன்
தமிழில் பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து அதன் மூலம் பாப்புலர் ஆனவர் நடிகை மாளவிகா மோகனன். தற்போது தி ராஜா சாப், சர்தார் போன்ற படங்களில் நடித்து வரும் மாளவிகா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து தினமும் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துவதை வழக்கமாக வைத்து வருகிறார்.
சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்த மாளவிகாவிடம் ஒரு ரசிகர், Virgin or not என்று கேட்க, இதுபோன்ற கேவலமான கேள்விகளுக்கு பதிலளிப்பதில்லை என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.
பிரபாஸ்
மேலும், நீங்கள் ஒரு நடிகருடன் ஒரு ஜாம்பி பேரழிவிலிருந்து தப்பிக்க வேண்டியிருந்தால், நீங்கள் யாரைத் தேர்வு செய்வீர்கள், ஏன்? என்று ஒரு ரசிகர் கேட்டுள்ளார்.
அதற்கு மாளவிகா, நான் நடிகர் பிரபாஸை தேர்வு செய்வேன். ஏனென்றால், அவரிடன் நிறைய சுவையான உணவுகள் இருக்கும், அதனால் அவருடன் இருந்தால் உணவை கண்டுப்பிடிப்பது பற்றிய கவலை இருக்காது என்று மாளவிகா தெரிவித்துள்ளார்.
நடிகர் பிரபாஸுடன் தி ராஜா சாப் என்ற படத்தில் மாளவிகா நடித்து வருகிறார் என்பதால்தான் அப்படி கூறியிருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
