பிக்பாஸ் சீசன் 9 டைட்டில் வின்னர் இவர் தான்!! அடித்து சொல்லும் நெட்டிசன்கள்..
பிக்பாஸ் சீசன் 9
பிக்பாஸ் சீசன் 9 தற்போது விஜய் சேதுபதியால் தொகுத்து வழங்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது. 85 நாட்களை தாண்டி சென்றுக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 9ல் கடந்த வாரம், அமித் மற்றும் கனிதிரு எவிக்ட்டாகி வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.
சும்மா இருக்கும் சுபிக்ஷா, அரோரா எல்லாம் வீட்டில் இருக்கும் போது கனி, அமித் வெளியேற்றப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

டைட்டில் வின்னர்
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 9 டைட்டில் வின்னர் யார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி பிக்பாஸ் சீசன் 9ன் டைட்டில் வின்னராக திவ்யா வருவார் என்று கூறபடுகிறது.
பேமிலி டாஸ்கின்போது பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த திவ்யாவின் சகோதரர் 200 சதவீதம் கன்ஃபார்ம் என்று உன் தோழி சொல்ல சொன்னார், அவர் என்ன சொன்னார் என்று எனக்கு புரியவில்லை, உன்னிடம் சொன்னால் உனக்கு புரியும் என்று கூறியிருக்கிறார்.

இந்த வீடியோ 24*7ல் மட்டும் ஒளிப்பரப்பானதால் இதை பார்த்த ரசிகர்கள் டைட்டில் வின் பண்ண திவ்யா பெரிய பிளான் போட்டுவிட்டார், இவர் தான் டைட்டிலை கைப்பற்றுவார் என்று கூறி வருகிறார்கள். அதேபோல் இந்த வாரம் திவ்யா, தான் 85வது நாள் பிரமோ வீடியோவில் அதிகம் காணப்பட்டுள்ளார்.