பின்னால் அடித்த இயக்குனர் பாலா!! சூர்யாவை போல் எஸ்கேப் ஆன இளம் நடிகை மமிதா..
நடிகர் சூர்யா பல ஆண்டுகள் கழித்து இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் என்ற படத்தில் நடிக்க கமிட்டாகி தானே தயாரித்து செலவு செய்து பாதி படத்தினை முடிந்தார். ஆனால் இரண்டு செட்யூல்கள் முடிந்த நிலையில் என்ன காரணம் என்று தெரியாமல் படத்தில் இருந்து விலகிவிட்டார் சூர்யா. ஆரம்பத்தில் சூர்யாவை ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓட வைத்து கொண்டே இருந்தது தான் பிரச்சனை என்றார்கள்.
இதனால் தான் சூர்யா பாலாவிடம் இருந்து ஒதுங்க முடிவெடுத்தாராம். அதன்பின் சூர்யா விலக, நடிகர் அருண் விஜய்யை வைத்து படம் எடுத்து வருகிறார் பாலா. படத்தில் டீசர் வீடியோ இணையத்தில் வெளியிட்ட பாலா, வணங்கான் படம் அப்படியே பிதாமகன் 2 போல் இருப்பதாக கூறி விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் வணங்கான் படத்தில் நடித்த இளம் நடிகை ஒருவர் அதிர்ச்சி தரும் ஒரு சம்பவத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். பாலா, தன் படத்தில் நடிக்கும் கலைஞர்களிடம் இருந்து நடிப்பை வரவழைக்க அடிக்கவும் தயங்காமல் அதை செய்தும் விடுவார்.
அப்படி பல நடிகர்களிடம் நடந்து கொண்டதை அடுத்து, வணங்கான் படத்தில் நடித்த மலையாள நடிகை மமிதா பைஜூ சமீபத்தில் அளித்த பேட்டியில் அதிர்ச்சிகரமான சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார்.
ஒரு காட்சியின் போது மமிதா பைஜூ டிரம்ஸ் அடித்து பாடிக் கொண்டே ஆடவேண்டிய நிலையில், பாலாவுக்கு திருப்தி ஆகாததால் பல முறை டேக்கானது.. சரியாக செய்யாத மமிதா பைஜூவால் கோபத்தில் இருந்த பாலா பின்னால் இருந்து அவரின் நடிகையின் தோல்பட்டையில் அடித்ததாக இளம் நடிகை மமிதா பாஜூ தெரிவித்துள்ளார்.