கப்பக்கிழங்கா, காரக்குழம்பா?... ரசிகர்களின் ஆசை நாயகி மீனாவின் அசரவைக்கும் டான்ஸ் வீடியோ
நடிகை மீனா
நடிகை மீனா தமிழில் முன்னணி ஹீரோயினாக 80கள் மற்றும் 90களில் இருந்தவர். அவர் தற்போது குணச்சித்திர வேடங்கள், டிவி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் கலந்துகொண்டு வருகிறார்.
அவரது மகள் நைனிகாவும் குழந்தை நட்சத்திரமாக விஜய் உடன் தெறி படத்தில் நடித்தார். அதற்கு பிறகு மகளை படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த சொல்லி இருக்கிறார் மீனா.
சமீபத்தில் நெப்போலியன் மகனின் திருமணத்திற்காக ஜப்பான் சென்று அங்கு குஷ்பு, சரத்குமார், சுஹாசினி, ராதாவுடன் நடனமாடி ரீல்ஸ் வெளியிட்டு இருந்தார்.
டான்ஸ் வீடியோ
இந்நிலையில், தற்போது நடிகை மகேஷ்வரியுடன் தூள் படத்தில் வரும் 'இந்தாடி கப்பகிழங்கே.. ஹோய் என்னாடி கார குழம்பே.. ஹோய் ஆத்தாடி அச்சு முறுக்கே' பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோவை ஷேர் செய்துள்ளார்.
இந்த வீடியோவின் கீழ் ஆண்டின் கடைசி மாதத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார். இதை கண்டு ரசிகர்கள் இன்றும் இளமை மாறாமல் மீனா வலம் வருவதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.