உருகி உருகி காதலித்த மீனா.. கடைசியில் வேறு ஒருவரை திருமணம் செய்து அதிர்ச்சி கொடுத்த நடிகர்
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக சினிமா பயணத்தை தொடங்கி பின்னர் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் மீனா.
இவர் தமிழ் , தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
மீனா வித்யாசாகர் என்பவரை 2009 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகளும் உள்ளார். கடந்த ஆண்டு வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கணவரை இழந்த வலியில் இருந்து வரும் மீனா, தற்போது தோழிகள் மற்றும் அவரின் மகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

காதலில் விழுந்த மீனா
மீனா திருமணம் செய்வதற்கு முன்பு பிரபல ஹிந்தி நடிகர் ரித்திக் ரோஷனை காதலித்த வந்தாராம். மீனா தன் காதலை அவரிடம் வெளிப்படுத்தி திருமணம் செய்து கொள்ள நினைத்தாராம். அப்போது எதிர்பாராத விதமாக ரித்திக் ரோஷன் வேறு ஒருவரை திருமணம் கொண்டாராம்.
இதனால் மீனா தன் காதல் ஆசையை ரித்திக் ரோஷனிடம் சொல்லாமல் கடைசி வரை மனதுக்குள் வைத்துக் கொண்டாராம்.
