நடிகை மீனா இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா..! எவ்வளவு தெரியுமா?
குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி பின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் மீனா. ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித், விஜயகாந்த், மோகன்லால், சிரஞ்சீவி என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
கிட்டத்தட்ட 43 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வரும் மீனா தற்போது மூக்குத்தி அம்மன் 2 மற்றும் ரவுடி பேபி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். மீனாவை போலவே அவருடைய மகளும் சினிமாவில் எண்ட்ரி கொடுத்துவிட்டார். அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2016ல் வெளிவந்த தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதன்பின் ஓரிரு படங்கள் நடித்த மீனாவின் மகள் நைனிகா தற்போது படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
49 வயதை எட்டியுள்ள நடிகை மீனாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 40 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் நடிகை மீனாவிற்கு சென்னையில் 4 முதல் 5 வீடுகள் வரை சொந்தமாக இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த சொத்து மதிப்பு குறித்து வெளிவந்துள்ள தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.