கோடிக்கணக்கில் சொத்து!! இரண்டாவது திருமணம்.. மீனா குறித்து பயில்வான் உடைத்த ரகசியம்
நடிகை மீனா
நடிகை மீனா தமிழில் முன்னணி ஹீரோயினாக 80கள் மற்றும் 90களில் இருந்தவர். இவர் நடித்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அவரை ஒரு கனவுக்கன்னியாக மாற்றியது.
அதன் பிறகு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். கல்யாணத்துக்கு பிறகு மீனா சினிமாவை விட்டு விலகி இருந்தார்.
ஆனால் தன் மகள் நைனிகாவை தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடிக்க வைத்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு மீனாவின் கணவர் உயிரிழந்தார்.
கணவர் உயிரிழந்த பின், குணச்சித்திர வேடங்கள், டிவி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் தான் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில், நடிகை மீனா குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறிய விஷயம் பலரின் கவனத்தை பெற்றுள்ளது.
உடைத்த ரகசியம்
அதில், " மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார், என்ற செய்தியை பரப்பி விட்டார்கள். ஆனால், எதையும் ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது.
கணவர் இறந்த பின், அவர் பெரிதாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. அதற்கு முக்கியமான காரணம் சித்தி, அக்கா, அம்மா போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க மீனா தயாராக இல்லை என்பது தான்.
மீனா நடித்து தான் காலத்தை கடத்த வேண்டும் என்ற அவசியமில்லை. அவருக்கு கோடிக்கணக்கில் சொத்து இருக்கிறது" என்று கூறியுள்ளார்.