பிரசவத்திற்குப்பின் உருவகேலி செய்யப்பட்ட கத்ரீனா கைஃப்!! தொழில் வளர்ச்சி மூலம் பதிலடி...
கத்ரீனா கைஃப்
பாலிவுட் சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி தற்போது இந்தியாவின் முன்னணி பெண் தொழில்முனைவோர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகை கத்ரீனா கைஃப். கடந்த ஆண்டு குழந்தையை பெற்றெடுத்த கத்ரீனா, சமீபத்தில் அம்பானியின் ஆண்டிலியா இல்லத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் தன் கணவர் விக்கி கெளஷலுடன் கலந்து கொண்டார்.

அப்போது கத்ரீனாவை எடுத்த வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. அதில் கத்ரீனா கைஃப் பார்க்க முந்தைய தோற்றத்தைவிட வித்தியாசமான தெரிந்துள்ளார். திருமணத்திற்கு முன்பு இருந்த கத்ரீனா எங்கே? என்றும் உடல் எடையை இப்படி கூடிவிட்டாரே என்று கருத்துக்களை கூறி உருவக் கேலி செய்தனர்.
இதற்கு பலதரப்பினர் கத்ரீனாவுக்கு ஆதரவான கருத்துக்களை கூறி வந்தனர். ஆனால் கத்ரீனா கைஃப் தன்னுடைய 40 வயதை கடந்த நிலையில் தாய்மையை ஏற்று, அண்மையில் தான் குழந்தை பெற்றெடுத்தார். பிரசவத்திற்குப்பின் ஒரு பெண்ணின் உடல். இயல்பான நிலைக்கு திரும்ப உரிய ஓய்வும் அவகாசமும் தேவை என்ற அறிவில்லாமல் விமர்சிப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பல பெண் பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும், ஒரு பெண் தாய்மை அடைந்து தன்னுடைய உடலை நேசிப்பதை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை, ஆரோக்கியமான தாய்மையை ஏற்றுக் கொண்டு பொதுவெளியில் தோன்றும் கத்ரீனா பல கோடி பெண்களுக்கு ஊக்கமளிக்கிறார் என்று ஆதரவாக குரல் கொடுத்தனர்.
தொழில் வளர்ச்சி
இது ஒரு பக்கம் இருக்க நிதி நாளிதழ், வர்த்தக இதழ்கள் என கத்ரீனாவின் வணிக வளர்ச்சியை வியந்து பாராட்டி வருகிறார்கள் அவரது கே பியூட்டி நிறுவனத்தின் வளர்ச்சி FY25-ல் ரூ. 240 கோடியில் இருந்து FY26-ல் ரூ. 350 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்தியா முழுவதும் மட்டுமில்லாமல் தற்போது இங்கிலாந்து, மத்தியக்கிழக்கு நாடுகளிலும் விரிவாக்கம் அடைந்துள்ளது. கத்ரீனாவின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ. 220 கோடிக்கும் அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு படத்திற்காக ரூ. 10 கோடி சம்பளமாக வாங்கும் கத்ரீனா அதிக சொத்து வைத்து டாப் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார்.