நடிகை மீனாவை பப்புக்கு அழைத்த ஆண் நண்பர்கள்.. கணவர் மறைவுக்கு பின் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
90 களில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் தான் நடிகை மீனா. இவர் பல தென்னிந்திய முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பல ரசிகர் கூட்டத்தை அதிகரித்தார்.
கடந்த ஆண்டு மீனாவின் கணவர் வித்தியாசாகர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். கணவர் இழப்பால் சோகத்தில் மூழ்கி இருந்த மீனா இதில் இருந்து மீண்டு வர சினிமாவில் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மீனா வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை பற்றி கூறியுள்ளார்.
அதில் அவர், " நான் இளம் நடிகையாக இருக்கும் போது அதிக ஆண் நண்பர்கள் இருந்தார்கள். 2000-ம் ஆண்டு பின்னர் தான் க்ளப்பிங், பப்பிங் போன்றது தொடங்கியது.
அப்போது நண்பர்கள் பப்புக்கு என்னை அழைப்பார்கள். ஆனால் என்னுடைய அம்மா அங்கெல்லாம் செல்ல வேண்டாம் என்று சொல்லுவார். இதனால் அம்மாவிடம் பல முறை சண்டை போட்டு இருக்கிறேன்" என்று நடிகை மீனா கூறியுள்ளார்.