அழகுலாம் தேவையில்லை..அதுமட்டும் போதும்!! நடிகை மீனாட்சி செளத்ரி சொன்ன காரணம்..
மீனாட்சி செளத்ரி
தமிழில் விஜய் நடிப்பில் வெளியான கோட், துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர், வெங்கடேஷ் டகுபதியின் அங்கராந்திக்கு வஸ்துனாம் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை மீனாட்சி செளத்ரி. கோட் படத்தில் நடித்தபோது அவரை பலரும் விமர்சித்த நிலையில் லக்கி பாஸ்கர் படம் மிகப்பெரிய ஆதரவை கொடுத்தது.
சமீபத்தில் சாய் அபயங்கர் இசையில் சித்திர புத்திரி என்ற ஆல்பம் பாடலில் ஆட்டம் போட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் நடிகை மீனாட்சி செளத்ரி. சமீபத்தில் அளித்துள்ள பேட்டியொன்றில் வெற்றியை அடைய அழகு, திறமை போன்ற எதுவும் தேவையில்லை.
அழகுலாம் தேவையில்லை
வெற்றியை பெறுவதற்கு ஒழுக்கம் இருந்தால் போதும். ஒழுக்கத்துடன் கூடிய கடின உழைப்பு, நம்மை உச்சத்தில் கொண்டு நிறுத்திவிடும். யாரும் நம்முடைய வெற்றியை தடுத்துவிடமுடியாது.
அழகு திறமை அதிகமாக உள்ளர்களும் ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பு இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு வெற்றி சாத்தியப்படாது என மீனாட்சி செளத்ரி தெரிவித்துள்ளார்.