3 லட்சம் கோடி சொத்து மதிப்பு!! ஆனந்த் அம்பானியின் 7 வாட்ச் எத்தனை கோடி தெரியுமா?
முகேஷ் அம்பானி
உலகின் டாப் பணக்காரர்கள் லிஸ்ட்டில் 18வது இடத்தில் இருந்து வருபவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீயின் தலைவரான முகேஷ் அம்பானி - நீடா அம்பானி தம்பதிக்கு ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி, அனந்த் அம்பானி என்ற மூன்று குழந்தைகள் பிறந்து தற்போது மூவரும் திருமணமாகி, குடும்பத்தையும் பிசினஸையும் பார்த்து வருகிறார்.
அம்பானி குடும்பம் என்றாலே பிரமாண்டத்திற்கு பேர் போனவர்கள் தான். தாங்கள் அணியும் ஆடை அணிகலன்கள் முதல் செல்லும் கார்வரை ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்தவகையில் கடந்த ஆண்டு ராதிகா மெர்ச்சண்ட் என்பவரை திருமணம் செய்து மிகப்பெரியளவில் பேசப்பட்டவர் ஆனந்த் அம்பானி.
ஆனந்த் அம்பானி வாட்ச்
2021 முதல் ரிலையன்ஸ் நியூ எனர்ஜி மற்றும் ரிலையன்ஸ் நியூ சோலார் எனர்ஜியின் வாரியங்களின் பொறுப்பை ஏற்று வரும் ஆனந்த் அம்பானி, மொத்த சொத்து மதிப்பு 40 மில்லியன் அமெரிக்க டாலராக (₹3,32,482 crore) என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆனந்த் அம்பானி போடும் ஆடை அணிகலன்கள் பலரால் ஈர்க்கப்பட்டு வரும். அந்தவகையில் ஆனந்த் அம்பானியின் பல கோடி மதிப்புள்ள வாட்ச் கலெக்ஷன் பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆடம்பர வாட்ச் பிராண்ட்களை வைத்திருக்கும் ஆனந்த் அம்பானி மொத்தம் 7 விலையுயர்ந்த வாட்ச்களை வைத்திருக்கிறார்.
Patek Philippe Nautilus 5260/1455R – $2,800,000,
Patek Philippe Nautilus 5990/1422G (Ruby) – $1,320,000,
Patek Philippe Nautilus 5990/1422G (Emerald) – $1,320,000,
Patek Philippe Grand Complication 6002G – $8,500,000,
Patek Philippe Grand Complication 5374/300P – $3,320,000,
Patek, Philippe Grand Complication 6002R – $5,500,000,
Patek Philippe Grand Complication 6300G-010 – $8,000,000 - போன்ற பிராண்ட் வாட்ச்களை ஆனந்த் அம்பானி வைத்திருக்கிறார். இந்த வாட்ச்களின் மொத்த மதிப்பு சுமார் $27,440,000(ரூ. 37 கோடிக்கும் மேல்) இருக்குமாம்.