காணாமல் போன சூப்பர் மாடல்... போலீஸுக்கே தண்ணி காட்றாங்களே

Meera Mitun
By Yathrika Oct 21, 2022 02:36 PM GMT
Report

மீரா மிதுன்

மீரா மிதுன் பிக்பாஸில் கலந்துகொண்ட இப்படி ஒரு நபர் இருக்கிறாரா என்பதை மக்கள் அதில் தான் தெரிந்து கொண்டார்கள்.

இவர் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வீடியோ வெளியாக இவர் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிப்பட்டது.

கைது செய்யப்பட்டு வெளியே வந்த இவர் நீதிமன்றம் முன் ஆஜராக கூறியும் இப்போதும் வரை ஆஜராகவில்லை. அண்மையில் வந்த விசாரணையின் போது போலீசார் தரப்பில், மீரா மிதுனை இன்னும் தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அவரது மொபைலும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருப்பதாக இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவித்த போலீஸ், அவரது உறவினர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தனர்.

காணாமல் போன சூப்பர் மாடல்... போலீஸுக்கே தண்ணி காட்றாங்களே | Actress Meera Mithun Abscond