விஜய் சேதுபதி இந்த வாரம் பிக்பாஸ் 10ல் வராததற்கு காரணம் என்ன?
Tamil Cinema
Tamil TV Shows
By Yathrika
பிக்பாஸ் 10
தமிழ் சின்னத்திரையில் எத்தனையோ பிரபலமான ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
அதில் பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 10. கடந்த செப்டம்பர் 6ம் தேதி இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது, 5 வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

தற்போது இந்த வாரத்திற்கான பிக்பாஸ் 10வது சீசனின் புரொமோ வெளியாகியுள்ளது. வழக்கமாக வரும் விஜய் சேதுபதி வரவில்லை, அவருக்கு பதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் வந்துள்ளார்.
காரணம் விஜய் சேதுபதிக்கு தொண்டை வலியாம், ஓய்வு எடுப்பதற்காக அவர் இந்த வாரம் வரவில்லை என கூறப்படுகிறது.