நடிகை மிருணாள் தாகூரின் ரிசெண்ட் புகைப்படங்கள்...
துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த சீதா ராமம் படத்தில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகை மிருணாள் தாகூர்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் இவரும் ஒருவர். பாலிவுட் திரையுலகில் நடித்து வந்த மிருணாள் தாகூருக்கு சீதா ராமம் படம் நல்ல பிரபலத்தை தென்னிந்திய சினிமாவில் ஏற்படுத்தி கொடுத்தது.
இதனையடுத்து பாலிவுட் படங்களில் தொடர்ந்து நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த டகோயிட் என்ற படம் வரும் 2026 மார்ச் 19 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
சமீபத்தில் நடிகர் தனுஷை மிருணாள் காதலித்து வருவதாகவும் இருவரும் பிப்ரவரி 14 ஆம் தேதியில் திருமணம் செய்யவுள்ளார்கள் என்றும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அது வெறும் வதந்தி என்று கூறப்பட்டது.
இதனை எதுவும் கண்டுகொள்ளாமல் தன் வேலையில் கவனம் செலுத்தி வருகிறார் மிருணாள். தற்போது கியூட் லுக்கில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.








