அந்த நடிகரா வேண்டவே வேண்டாம்!! அவமானப்படுத்திய நதியாவை, ஷோபனாவை வைத்து பழிதீர்த்த கேப்டன்
தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை நதியா. தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நதியா தற்போது வரை இன்னும் இளமையுடன் தான் இருந்து வருகிறார்.
அப்படி நடிகை நதியா இதுவரையில் எந்த படத்தில் கிளாமராக நடித்ததே கிடையாது. அதேபோல் கமல் ஹாசன் படத்தில் நடிக்க கூடாது என்ற உறுதியில் இருந்து வந்தார். இதற்கு காரணம் கமல் ஹாசன் படம் என்றால் முத்தக்காட்சி என முகம் சுளிக்கும் படியாக இருப்பதால் தானாம்.
இந்நிலையில் நடிகர் விஜயகாந்தை ஒதுக்கியும் வந்திருக்கிறார் நடிகை நதியா. அவரின் திரைப்பயணம் ஆரம்பத்தில் பூ மழை பொழியுது என்ற படத்தில் விஜயகாந்துடன் நடித்திருந்தார். அதன்பின் விஜயகாந்துடன் ஜோடிப்போடுவதை விட்டுவிட்டு மற்ற நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்தார்.
அதற்கு காரணம் கருப்பாக இருக்கும் விஜயகாந்துடன் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக இருந்துள்ளார். அதேபோல் ரஜினிகாந்த் படத்தில் கட்டாயப்படுத்தி தான் ராஜாதி ராஜா படத்தில் நடித்திருந்தார். இதையறிந்த விஜயகாந்த் கேரள நடிகை ஷோபனாவை களமிறக்கினாராம்.
இந்த விசயத்தை சமீபத்தில் சர்ச்சை பத்திரிக்கையாளர் பயில்வான் கூறியுள்ளார். தற்போது 50 வயதை எட்டிய நடிகை நதியா, தோனி தயாரிப்பில் LGM என்ற படத்தில் ஹரிஷ்கல்யாணுக்கு அம்மாவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.